in

நாமக்கல் ராசிபுரத்தில் கற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் பங்கேற்பு

நாமக்கல் ராசிபுரத்தில் கற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கன்னையா தெருவில் உள்ள கற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோவிலில் பொன்விழா ஆண்டைத் தொடர்ந்து கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவிலில் விநாயகர் சிலை அமைக்க ஐந்தரை அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

இதற்கான கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து முன்னதாக கணபதி பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் காலயாக ஹோம பூஜையும், வாஸ்து பூஜை, பீடத்தில் விநாயகர் சிலை நிலை நிறுத்துதல், மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும், இதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடத்தப்பட்டு கோபுர கலச பூஜையும் நடைபெற்று, மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இதன் பின்னர் கோமாதா பூஜை சுவாமிக்கு தசா தரிசன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மா.மதிவேந்தன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் நகர திமுக செயலாளர் சங்கர், நகர மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர், தொழிலதிபர் என். பாலசுப்பிரமணியம், கௌரவ பலிஜுவார் நாயுடுகள் சங்க தலைவர் சிட்டி வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

What do you think?

தீர்த்தத்தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில் குடமுழுக்கு விழா

செஞ்சியில் அகிம்சை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது