நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா துவக்கம் முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் .
இன்று கந்த சஷ்டி விழா முதல்தினத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்தார் அப்போது ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி தங்கள் விரதத்தை துவக்கினர் அப்போது கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகள் முருகப்பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது பின்னர் மூலவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும் பின்னர் சிறப்புஅலங்காரமாக தங்க கவசம்சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது .
இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


