in

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவின் 470 ஆம் ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வழியாக ஆண்டவர் தர்கா வந்து அடைந்தது.

ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் புனித கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிராத்தனை செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 19ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு, 20ம் தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு தர்காவில் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி நாகை திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

தேனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் மீது ஒடுக்குமுறையா? பணிநீக்க மிரட்டல் எனப் புகார்!

புதுச்சேரி.100 அடி சாலை சுரங்கப்பாதையில் இடுப்பளவிற்கு தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி…