in

ஆன்மீக நகரில் வெளுத்து வாங்கிய கனமழை….

ஆன்மீக நகரில் வெளுத்து வாங்கிய கனமழை….

 

திருவண்ணாமலை ஆன்மீக நகரில் கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு முதலில் லேசான மழை தொடங்கியது. பின்னர் கனமழையாக மாறி சுமார் அரை மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது.

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாச்சிப்பட்டு, வேங்கிக்கால், ஆடையூர், அத்திந்தல் உள்ளிட்ட நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

2668 அடி மலை ஏறுவதற்கு முற்றிலும் தடை

மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு ​