in

ஆதீனம் 24-ஆவது மடாதிபதியை சந்தித்த வேளாண் துறை அமைச்சர்

ஆதீனம் 24-ஆவது மடாதிபதியை சந்தித்த வேளாண் துறை அமைச்சர்

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது மடாதிபதியை சந்தித்தார் வேளாண் துறை அமைச்சர் வினோத்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத்,திருவாவடுதுறை ஆதீனத்தில் மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார், சைவ திருமுறை மாநாடு குறித்து கேட்டறிந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது.இந்த மடத்தில் கடந்த வாரம் சைவத்திருமுறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க தமிழக வேளாண்துறை அமைச்சர், வினோத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அலுவல் பணி காரணமாக அமைச்சர் பங்கேற்காத நிலையில் இன்று, திருவாவடுதுறை ஆதீனம் மடத்திற்கு அமைச்சர் வினோத் நேரில் வருகை புரிந்து, ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து மாநாடு நடைபெற்றது குறித்து மடாதிபதியுடன் கலந்துரையாடினார்.

What do you think?

நாமக்கல் பரமத்திவேலூர் பச்சைமலையில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா

கடலூர் கம்மியம்பேட்டையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு!