நாமக்கல் பரமத்திவேலூர் பச்சைமலையில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா
இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் அருள்மிகு பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் ஆன்மிக பசுமைத் திருவிழா மற்றும் உழவாரப் பணி நடைபெற்றது.
இதில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம், நாமக்கல் மனவளக்கலை மன்றம், அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை, பச்சைமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் மற்றும் திருப்பணிக் குழுவினர் ஆகியோர் இணைந்து இந்த விழாவை நடத்தியது.
இதன்படி, பொத்தனூர் அருள்மிகு பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா கோயிலை சுற்றி நடவு செய்யப்பட்டது.
அப்போது மூலவர் பச்சைமலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது இவ்விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலர் N.நாகராஜன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கோயில் திருப் பணிக்குழு பழனிக்குமார் செந்தில் நாதன் வெங்கடாஜலம் அன்பு சௌந்திரராஜன் சிங்காரம் பாலன் சக்தி குரூப்ஸ் SPM சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்தியாலயம் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட உப தலைவர் இன்ஜினியர் என். மாணிக்கம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு செயலாளர் டாக்டர் மு.ஆ. உதயக்குமார் முன்னிலை வகித்தார்கள்.
விழாவில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றின் ஆன்மிக மற்றும் பச்சைமலை தல வரலாறு பற்றி இயக்குனர் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் ஆன்மிக பைங்கொழுந்து டாக்டர் எஸ். குருவாயூரப்பன் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இத்தகைய சூழலில், மரம் வளர்ப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதுடன், ஆன்மிகத்தையும் இயற்கைப் பாதுகாப்பையும் இணைக்கும் நோக்கில் இந்தப் பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியான மரங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மரங்களை நட்டு வளர்ப்பது ஆன்மிக நம்பிக்கையுடன் இயற்கையைப் போற்றும் மரபாகவும் இருந்து வருகிறது.
இந்த மரபை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், மரங்களின் மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
ஆன்மிகத் தலங்களை வழிபாட்டுக்கான இடங்களாக மட்டுமின்றி, இயற்கையைப் பாதுகாக்கும் பசுமை மையங்களாகவும் மாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் மகிழ்ச்சி மன்ற இராஜேந்திரன், மாதப்பன், தலைவர்,
நாமக்கல் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் (தமிழ்நாடு) S.பழனிசாமி, விருச்சம் என்.எஸ். முரளிதரன், செல்லப்பன், மனவளக் கலைமன்ற உறுப்பினர்கள் AVAA முன்னாள் மாணவர் அக்ரி குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


