வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை ஐப்பசி மாத ஜோதி தரிசனம்
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஐப்பசி மாத பூச தினத்தை முன்னிட்டு சத்திய ஞான சபையில் சுமார் 7.55 மணி அளவில் ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
அப்பொழுது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனத்தை பக்தர்கள் வழிப்பட்டனர்.

இந்த ஐப்பசி மாத பூச திருநாளில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வள்ளலார் பக்தர்கள், சன்மார்க்க அண்பர்கள் மற்றும், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஜோதியினை கண்டு வழிபாடு செய்தனர்.


