in

வேப்பூரில் கடும் பனிமூட்டம் உருண்டு செல்லும் வாகனங்கள்

வேப்பூரில் கடும் பனிமூட்டம் உருண்டு செல்லும் வாகனங்கள்

 

வேப்பூரில் கடும் பனிமூட்டம் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக உருண்டு செல்லும் வாகனங்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக ஒரு சிலர் வாகனத்தை இயக்க முடியாமல் சாலை ஓரமாக நிறுத்தி வைப்பு.

கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டமானது பெய்து வருகிறது.

பனிமூட்டம் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம் டு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர்.

கடுமையான பனிமூட்டம் காரணமாக சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிலர் பெட்ரோல் பங்கு உள்ளிட்ட இடங்களில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்து செல்கின்றனர்.

தாலுகாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பல இடங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்தும் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பனிமூட்டம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதமே தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே கடும் பனிப்பொழிவானது தொடங்கியதால் பள்ளிக்கு செல்லக் கூடியவர்கள் அலுவலகத்திற்கு செல்லக் கூடியவர்கள் என மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

What do you think?

திருவாவடுதுறை ஆதீனத்தில் மகளிருக்கு இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்!