in

நெய்வேலி வட்டம் 9  ஜே.சி போஸ் சாலையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிற்றரசு 57. இவர் என்எல்சி 1 A  சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார்.

நெய்வேலி வட்டம் 9  ஜே.சி போஸ் சாலையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிற்றரசு 57. இவர் என்எல்சி 1 A  சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் முதல் ஷிப்ட் பணிக்கு சிற்றரசு சென்றுள்ளார் அப்பொழுது வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  சிற்றரசுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அருகில் இருந்த என்எல்சி ஊழியர்கள் சிற்றரசுவை  ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி சிற்றரசு உயிரிழந்ததாக  தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  நெய்வேலி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில் உயிரிழந்த சிற்றரசு குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு பாமக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்தனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பாமக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில் உயிரிழந்த சிற்றரசு குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலையும் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் பேச்சுவார்த்தைக்கு என்எல்சி நிறுவனம் அழைக்கவில்லை என்றால் பபாமக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தும் நடத்துவோம் என கூறினார்.

உயிரிழந்த ச உயிரிழந்த என்எல்சி ஊழியர் சிற்றரசுக்கு  இரண்டு மகள்கள் ஒரு மகன்கள் உள்ளனர் இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

புதுச்சேரி விமான நிலையத்திற்கு முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வருகை..

தூத்துக்குடி புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்