அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவியல் கண்காட்சி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவியல் கண்காட்சி

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.
9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 25 மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 300 மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

இதன் சிறப்பு அம்சமாக அறிவியல் காட்சிகளான கோலரங்கம், முப்பரிமாண அரங்கத்தோற்றம், AR & VR Zone, விசுவல் அண்ட் கேமிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் சார்ந்தவைகள் இடம்பெற்றன.
இவ் அறிவியல் கண்காட்சியில் சிறந்து விளங்கும் அறிவியல் படைப்புகளுக்கான ரூ.1 லட்சத்திற்கான பரிசினை வழங்கப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி இணை துணைவேந்தர் மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும். பெரியாரின் வாழ்வியல் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

