in

தேனியில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணைந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்

தேனியில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணைந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி “We The Leader” என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி தன்னார்வலர்களை இணையதள வாயிலாக கட்சியில் இணைத்து வருகிறார்

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவின் பொறுப்புகளில் இருந்து விலகி அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

பாஜக இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் அஜித் இளங்கோ தலைமையில் மாவட்ட பொருளாளர், மாவட்ட ஐடி விங் தலைவர், தேனி நகர நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகி “We The Leader” அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்

பாஜகவில் உழைக்கும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்திருப்பதாக தெரிவித்தனர்

What do you think?

நிலுவை தொகையை வழங்காத கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பில் எறும்பு மருந்தை உட்கொண்ட இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மெடிக்கலில் வைத்தியம் பார்த்ததால் இளைஞர் உயிரிழப்பு