பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பேரணி.
நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தில் iஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 10,000 மேற்பட்டோர் என்எல்சி சுரங்கங்கள் அனல் மின் நிலையங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர் இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வல வலியுறுத்தி நெய்வேலி மத்திய மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திடலில் இருந்து நிலையத்திலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தில் என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்பொழுது காவல்துறையினர் நேரு சிலை அருகே ஒப்பந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி
சொசைட்டியிலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தர படுத்த வேண்டும்,ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் சொசைட்டியில் சேர்க்க வேண்டும்,2008 முதல் விடுபட்டவர்களை சீனியாரிட்டி பட்டியலில் இணைத்திட வேண்டும் வேண்டும் குறிப்பாக ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சவார்த்தையை உடனடியாக துவங்க துவங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்தப் பேரணியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் மற்றும் நிலம்-வீடு கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கம் உள்ளிட்டூர் கலந்து கொண்டனர்.


