in

கும்பகோணத்தில் ஆட்டோ தொழிலாளர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

கும்பகோணத்தில் ஆட்டோ தொழிலாளர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தினமும் மானிய விலையில் ஆட்டோவிற்கு 5 லிட்டர் எரிபொருள் வழங்க வேண்டும், ஆட்டோவிற்கான இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும், ஓலா உபர் ரேபிடோ ரெட் டாக்ஸி போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும், குறைந்தபட்ச வாடகை கட்டணத்தை உடனே அறிவிக்க வேண்டும், அரசே ஆட்டோ செயலி உருவாக்க வேண்டும், எப்சி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் மற்றும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து நிலைய ஆட்டோ தலைவர் மனோகரன், மாவட்ட துணை தலைவர் ஆரோக்கியதாஸ், ரயில் நிலைய தலைவர் கணேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் கண்ணன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கௌரவ தலைவர் செந்தில்குமார் மற்றும் அனைத்து பகுதிகளை சேர்ந்த ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

புதுச்சேரியில் தொடர் மழை: நிரம்பும் நீர்நிலைகள்; உடைந்த படுகை அணையால் கடலில் வீணாகும் தண்ணீர்! 

Live Casino Tablet: Ein umfassender Leitfaden für Spieler mit 15 Jahren Erfahrung