in

புதுச்சேரியில் தொடர் மழை: நிரம்பும் நீர்நிலைகள்; உடைந்த படுகை அணையால் கடலில் வீணாகும் தண்ணீர்! 

புதுச்சேரியில் தொடர் மழை: நிரம்பும் நீர்நிலைகள்; உடைந்த படுகை அணையால் கடலில் வீணாகும் தண்ணீர்! 

புதுச்சேரியில் பிள்ளையார்குப்பம்-செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த கனமழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால்

அணை பராமரிக்கப்படாததால் 2021ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் சென்று சேர்ந்தது.
புதிய அணையை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.20.40 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் இன்னும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகநீர்நிலைகள் நிரம்பி சங்கராபரணி ஆற்று வழியாக உபரி நீர் செல்கிறது.

பிள்ளையார் குப்பம் படுகை அணை முற்றிலும் உடைந்ததால் நீர் தேங்காமல் கடலுக்கு சென்று கொண்டு இருக்கிறது.இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.விவசாயத்திற்கு தேவையான நீர் கண் எதிரே கரைந்து போவதால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

புதுச்சேரி-தமிழக எல்லையான பக்கிரிபாளையத்தில் தமிழக அரசு கட்டிய தடுப்பணையால் நீர் மட்டம் உயர்வதாகவும் ஆனால் புதுச்சேரி அரசின் அலட்சியம் காரணமாக செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்

What do you think?

புதுச்சேரியில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி! வீட்டுக்குள் மீன், பூரான், எலி புகுவதால் அச்சம்!

கும்பகோணத்தில் ஆட்டோ தொழிலாளர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!