in

பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூங்கரகம் ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது

பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூங்கரகம் ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள இந்திராநகர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,பகவதியம்மன் கோவில் வைகாசித் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலம் நடைபெற்றது, ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு ஏராளமான பக்த்தர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி,மாவிளக்கு,தீசட்டி, பால்குடம் எடுத்தும்,பொங்கள் வைத்தும்,கிடாய் வெட்டியும் நேற்றிக்கடன் செலுத்தினர்.

இந்த விழாவில் திண்டுக்கல்,மதுரை,கோவை, சென்னை,பாண்டிச்சேரி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்………

What do you think?

விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு

நத்தம் அரண்மனை சந்தன கருப்பு கோயிலில் 2 உண்டியல்களை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- நத்தம் காவல் துறையினர் விசாரணை