ஒரு வழி பாதையில் காரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..
பல்வேறு இடங்களில் காரில் இருந்து வேளியே வராமல் காரில் அமர்ந்து ஆய்வு…..
பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் கார்கள் புடை சூழ மாநகராட்சியில் பவனி…..
திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் இன்று திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே இருந்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சின்ன கடை வீதியில் ஒரு வழி பாதையில் காரில் சென்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆய்வு செய்தது சாலை விதிகளை மீறி ஒரு வழி பாதையில் சென்றதால் பொதுமக்கள் இவர்கள் இந்த தவறு செய்யலாமா என்று பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் காமராஜர் சிலை சந்திப்பு, கிரிவலப் பாதையில் ஆய்வு செய்தார். குறிப்பாக பல்வேறு இடங்களில் காரில் இருந்து இறங்கி வராமல் காரில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை, மின்சார துறை, மாநகராட்சி துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் காரில் பவனி வந்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஆய்வு மேற்கொண்டார்


