in

வேணுகோபால சுவாமி கோவில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழா!

வேணுகோபால சுவாமி கோவில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழா!

 

ஓசூர் கோகுல் நகர் வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழா!

ஸ்ரீ சம்பூர்ண ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் பாராயணம் – ஹோமங்கள், பூர்ணாஹுதி மற்றும் சிறப்பு பூஜைகள்; திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சம்பூர்ண ராமாயண பாராயணம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீ சம்பூர்ண ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள 24 ஆயிரம் ஸ்லோகங்கள் பக்தி பரவசத்துடன் பாராயணம் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஸ்ரீராமருக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு, பின்னர் ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு கடல்களின் தீர்த்தங்களைக் கொண்டுவந்து, அவற்றை கும்பத்தில் ஆவாஹனம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீராமரின் வீரத்தையும் தர்மத்தையும் போற்றும் வகையில், அவருக்கு கோதண்டம் எனப்படும் வில்லும் அம்பும் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், ஸ்ரீராமர் பட்டாபிஷேக வைபவத்தை முன்னிட்டு, எட்டு பிராமணர்கள் ஆவாஹனம் செய்யப்பட்டு, பட்டாபிஷேகச் சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சீதா ராமர், லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ராமாயணத்தின் சிறப்பையும், ஸ்ரீராமரின் தர்மநெறியையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தை நேரில் கண்டு தரிசனம் செய்த பக்தர்கள், சுவாமியின் அருளைப் பெற்றுச் சென்றனர். விழாவின் ஒரு பகுதியாக, அண்ணன் கூட உற்சவமும் நடைபெற்றது.

பின்னர், கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

முலைப்பால் தீர்த்தம் நிரம்பியதால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி