in

மீட்பு ஒத்திகை பயிற்சி: தலைஞாயிறில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

மீட்பு ஒத்திகை பயிற்சி: தலைஞாயிறில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பொதுமக்களுக்கு தீயணைப்பு விழிப்புணர்வு :வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற மீட்பு ஒத்திகை பயிற்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி “வாங்க கற்றுக் கொள்ளலாம்” என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையேற்று, பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்படும் சூழ்நிலைகளில் எவ்வாறு தங்களை மற்றும் பிறரை பாதுகாப்பது என்பது குறித்து விரிவான செயல் விளக்கங்களை அளித்தார்.

மேலும், தீ அணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை, எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், தீ விபத்து ஏற்பட்டதை போன்ற போலி ஒத்திகை (Mock Drill) நடத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தும் முறையை நேரடியாகக் காட்சிப்படுத்தினர். இந்த ஒத்திகை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தீயணைப்பு துறையின் செயல்முறைகளை நேரில் அறிந்து கொண்டு, அவசர காலங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உறுதி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததுடன், பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கமும் வலுப்பெற்றுள்ளது.

What do you think?

உர விலை ஏற்றம், தட்டுப்பாடு எதிரொலி: விவசாயிகள் வேதனை

எரிவாயு விலை குறைப்பு கோரி நாகையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்