in

சப்த கன்னி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

சப்த கன்னி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

 

நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சப்த கன்னி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா : மூன்று மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் பங்கேற்பு:

நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட 66 மீனவ கிராமங்களில் தலைமை கிராமமான நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் மீனவர்களின் காவல் தெய்வமான மீனவ கிராமத்தில் சப்த கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 5 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி கோபுர கல் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

சப்த கன்னி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

வேடசந்தூர் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு

சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 25 வயது பெண் வெட்டி படுகொலை