எவுகனை நாயகனுக்கு 95 வது பிறந்த நாள் சிறப்பு பிரார்த்தனை
எவுகனை நாயகனுக்கு 95 வது பிறந்த நாள்: குடும்பத்தினர், கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக கலாம் நினைவகத்தில் மரியாதை செலுத்திய பின் அமைச்சர் பேட்டி
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன் பாரத ரத்னா அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளையொட்டி இன்று பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் கொண்டாடப்பட்டு வருவதையடுத்து நினைவகத்தில் கலாம் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்ததை தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம் தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில் 2015 ஜூலை 27 ல் அவர் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017 ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் இன்று அப்துல்கலாம் 95 வது பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அப்துல்கலாமின் குடும்பத்தினர்,ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் நினைவிடத்திற்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய நினைவுகத்தில் கலாம் நினைவிடத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மாணவர்கள் பொதுமக்கள் என அடுத்தடுத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாம் நினைவுத்தில் அவரது பிறந்த நாளை ஒட்டி அஞ்சலி செலுத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா செய்தியாளரிடம் பேசுகையில் கலாம் நினைவுகள் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் நினைவகத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைவதால் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கலாமின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை உடனடியாக கருத்தில் கொண்டு மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசியவர் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் தொடந்து கண்காணித்து வருகிறது.
தொடர் கன மழை காரணமாக நான்கு இடங்களில் மரம் முறிந்து விரிந்துள்ளது அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
எனவே வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


