அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

பிறந்த நாளையொட்டி லாசுப்பேட்டை பகுதியில் உள்ள புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

