ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு 390 கோடி சொத்து எப்படி வந்தது
காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ன,மேற்கு ஒன்றியம் மற்றும் நகர கழக ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ பெருமந்தூர் பேரா மவுண்ட் தனியார் மண்டபத்தில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் தலைமையில் நடைபெற்றதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பங்கேற்றார்.
அப்போது பேசிய மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் அவர்கள் திருச்சியில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஆதவ் அர்ஜூனா 190 கோடி அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என 300 கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார் 42 வயதில் 25 வயது வரை படித்திருப்பார் பிறகு, எப்படி இந்த இருபது வருடத்தில் அவ்வளவு சொத்து வந்தது, அவரைப் பற்றி நாம் ஒரு அறிக்கை கொடுத்த சொல்ல வேண்டும் .
ஒவ்வொரு பின்னாலும் ஒரு கதை இருக்கும் துரோகம் இருக்கும் அவரது பின்னால் லாட்டரி குடும்பத்தின் துரோக பின்னணி உள்ளது என ஆவேச உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது ஒரு ஆட்சி பதவியேற்ற ஒரு வாரத்திலேயே மக்களுடைய ஏளனப் பேச்சுக்கு ஆளான ஒரு கட்சி என்றால் அது தாவேகா தான் என்றார்.
தற்போது ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் ஏன் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டோம் என நினைப்பதாகவும், தான் குழந்தை கூறியது தன் பேரட் கூறினார் என ஓட்டு போட்டவர்கள் இன்று வருத்தப்படுவதாக தெரிவித்தார்.
எனவே அனைவரும் ஒன்றுபட்டு வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேர்மன், பேரூராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் அனைவரும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபட ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநில பாசறை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார், நகர செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் இறையூர் முனுசாமி சிங்கிலிபாடி ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பேரிஞ்சம்பாக்கம் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு


