in

பாட மட்டும் தான் வருமா?…, எனக்கு நடிக்கவும் தெரியும்

பாட மட்டும் தான் வருமா?…, எனக்கு நடிக்கவும் தெரியும்.

முன்னணி பாடகர்களின் வரிசையில் இருக்கும் ஹரிஹரன்.

கசல் பாடல்களைப் பாடுவதில் வல்லவர், இவர் கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடி அசத்திய இவரின் குரலில் வெளியான குறுக்கு சிறுத்தவளே, ஏதோ ஒரு பாட்டு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக ஹிட் அடித்தது.

இதுவரை இவர் தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் 250க்கும் மேலான பாடல்களையும் பாடியுள்ளார்.

இதுவரை தன் குரல்களால் மட்டுமே ரசிகர்களை வசியம் செய்த ஹரிஹரன் தற்பொழுது நடிக்கவும் தயாராகி விட்டார்.

மலையாளத்தில் கே.ஜி. விஜயகுமார் இயக்கும் தயாபாரதி படத்தில் ஹரிஹரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் நடிக்கின்றார்கள் விரைவில் இந்த படம் வெள்ளி திரைக்கு வரும் என்று எதிர்பார்கலாம்.

What do you think?

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

பகையை மறந்து மனைவியின் படத்தை பாராட்டிய தனுஷ்.. தெறிக்க விடும் லால் சலாம் Trailer