in

நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞரணி சார்பில் திட்டச்சேரியில் கலைஞர் நூலகம் திறப்பு விழா


Watch – YouTube Click

நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞரணி சார்பில் திட்டச்சேரியில் கலைஞர் நூலகம் திறப்பு விழா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் மாவட்ட இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள், பள்ளி மாணவ மாணவிகள் இளைஞர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் கலைஞர் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான என். கெளதமன் பங்கேற்று கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்விற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா தலைமையிலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஓன்றிய திமுக செயலாளர் செல்வ.செங்குட்டுவன், பேரூர் கழக செயலாளர் சுல்தான், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கலையரசன், அசோக், தாமோதரன்,டேனியல் சத்யா,சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்


Watch – YouTube Click

What do you think?

நரிக்குறவர்களுக்கு குடியிருப்புகள் திறந்து வைத்த மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

நெல்லையில் சிறப்பு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா