தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்……
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து திட்டம் துவக்கம்…..
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பச்சிளங் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது அதற்காக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று அறிவித்தார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஜூன் 22 முதல் 25.9.2026 வரை ஏற்கனவே பிறந்த 4,694 பச்சிளம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகின்றனர். இன்றிலிருந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 பச்சிளம் குழந்தைகளுக்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் மற்றும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்தார்.


