in

நெல் நாற்று நடவு பணியில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள்

நெல் நாற்று நடவு பணியில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள்

 

ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நாற்று நடவு பணியில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள்…

வட மாநில தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபடுத்துவதால் உற்பத்தி செலவும் குறைவதாக விவசாயி தெரிவிப்பு…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், காஞ்சி, கடலாடி, நாயுடுமங்கலம் மற்றும் அமர்நாதபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விவசாய பணியில் வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவ்வாறு விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை விட குறைந்த அளவே சம்பளம் கேட்பதாகவும் வேலைப்பளு குறைவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு நடவுப் பணி செய்வதற்கு சுமார் 5 ஆயிரம் வரை ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.

கலசபாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக தங்கி இவ்வாறு விவசாய பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

What do you think?

தரங்கம்பாடியில் சுற்றுலா தின விழா!

புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா  கருடசேவை புறப்பாடு