in

புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம்

 

மன்னார்கோயில் அருள்மிகு ராஐகோபால சுவமி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம். திரளான பக்தா்கள் தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது மன்னார்கோவில். இப்பகுதியின் புராண பெயர் வேதபுரியாகும். இத்திருக்கோயில் சுமாா் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயிலில் மூலவராக வேதநாராயணப்பெருமாளும் உற்சவராக ஸ்ரீ ராஜகோபாலரும் திருக்கோயில் தல விருட்சமாக பலா மரமும் அமைந்துள்ளது.

இத்தலத்தில் மூலவர் மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டவராக கருவறையில் பெருமாள் நின்ற கோலம், அவருக்கு மேல், அஷ்டாங்க விமானத்தின் முதல் அடுக்கில் வீற்றிருந்த கோலம், அதற்கு மேல் உள்ள அடுக்கில் சயனகோலம் என மூன்று திருக்கோலத்திலும் காட்சி தருவது பிற வைணவ ஆலயங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது.

உற்சவா் ஸ்ரீராஜகோபாலா் சமேத ஸ்ரீஆண்டாள் உடன் ஸ்ரீகெருடாழ்வாா். 12 ஆழ்வாா்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற தலம் ஆகும். அவா் திருவரசு கோவிலில் உள் பிரகாரத்தில் கொடி மரத்துடன் அமைந்துள்ளது. திருக்கோயில் சுற்றுப்பிரகாரத்தில் நரசிம்மர், வேதவல்லி, ராமானுஜர், மணவாளமாமுனி, ஆகியோரும் அருள்புரிகின்றனர்.

மேலும் இத்தலத்தில் வேதம் ஒலிக்கும் இடமென்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்க பிரதானமாக வேண்டப்படுகிறது. சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கலசங்கள் பிரதிஷ்டை செய்து ஆவாகனம் நடைபெற்றன. பின்னா்உற்சவா் ராஜகோபாலா் ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீகெருடாழ்வார் ரை கைத்தலமாக ஏழுந்தருளச் செய்தனா். புருஷசுத்தம் சொல்லி திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடா்ந்து ஸ்ரீராஜகோபாலா் சமேத ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீகெருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் இந்த புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை காத்திருந்து தாிசனம் செய்து வழிபட்டனா்.

What do you think?

பக்தர்களுக்கு சூடான பசும்பால் & பிஸ்கட்!