குத்தாலம் வில்லியநல்லூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
குத்தாலம் வில்லியநல்லூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பங்கேற்று தாலி பாக்கியம் நிலைக்கவும் உலக நன்மைக்காகவும் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் வில்லியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம தெய்வமான திரௌபதி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றன முன்னதாக ஆலய வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் உலக நன்மை வேண்டியும், தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும் இதில் பங்கேற்ற பெண்கள், குத்து விளக்கை அம்மனாக பாவித்து புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும் ஆலய அர்ச்சகர்கள் கூறும் மந்திரங்களுக்கு ஏற்ப குங்குமத்தால் திருவிளக்கை பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.

இதில் ஏராளமான பெண்கள் குடும்ப நன்மைக்காக குத்துவிளக்குடன் பூஜையில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.
இவ்விழா ஏற்பாடுகளை குத்தாலம் வில்லியநல்லூர் கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


