in

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – வீதி உலா Madurai Meenakshi Amman Temple Consecration – Procession

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – வீதி உலா

 

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர்கள் ரமேஷ், சி.டி.ஆர். நிர்மல் குமார், விஸ்வநாதன், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரரும், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வீதி உலாவைக் காண நான்கு மாசி வீதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

 மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் கோ பூஜை

குத்தாலம் வில்லியநல்லூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை