நாமக்கல் சேந்தமங்கலம் சிவஆலயத்தில் உழவாரப்பணி
நாமக்கல் சேந்தமங்கலம் சிவஆலயத்தில் உழவாரப்பணி ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருள்தரும் சௌந்தரநாயகி அம்மை உடனமர் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவிலில் உழவார பணி நேற்று நடைபெற்றது.
இதில் சிவ அடியார் பெருமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் உழவாரப் பணியில் திரளாக கலந்து கொண்டுதிருக்கோயில் பிரகாரங்களை சுத்தம் செய்தல் தேவையில்லாத மரங்களின் கிளை மற்றும் களை செடிகளை அகற்றுதல்.

கோவிலில்உள்ள சாமி ஆடைகள் மற்றும் பாத்திரங்கள் தூய்மை செய்யும் பணிகள் என பல்வேறு உழவாரப் பணிகள் செய்தனர். அடியார்களுக்கு அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாமக்கல்அம்மையப்பர் அறக்கட்டளை மற்றும் திருநாணா உழவார பணி குழு சார்பாகநேற்று நடைபெற்றது.


