200 கிலோ அன்னம் கொண்டு அன்னாபிஷேக அலங்காரம்
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் 200 கிலோ அன்னம் கொண்டு அன்னாபிஷேக அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாங்கல்ய கயிறு அலங்காரம், மீனாட்சி அம்மன் அலங்காரம், இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் உள்ளிட்ட பல அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி இன்று ஆடி 4ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால்,தயிர், மஞ்சள், சந்தனம், தேன்,பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் 10.ஆம் ஆண்டாக 200 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


