ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை சந்தனகாப்பு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்
நாமக்கல் மோகனூர் மாரியம்மன்ஆலயத்தில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை சந்தனகாப்பு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-ம் வெள்ளிகிழமை தினத்தை முன்னிட்டு நேற்று மாலைகோவில் வளாகம் முன் திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது அப்போது சிவாச்சாரியார்கள் திருவிளக்கு பூஜையை முறையாக விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி போற்றி மந்திரங்கள் கூறி ஒவ்வொரு நிகழ்வாக செய்தனர் அப்போது பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் சொல்ல சொல்ல அதற்கு ஏற்றார் போல் திருவிளக்கு பூஜையை மிக விமர்சையாக செய்தனர் அப்போது மூலவர் சந்தன காப்பில் திருக்காட்சி தந்தார் அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்பின்னர் அன்னதான நிகழ்வு மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்

