மாதாந்திர பூஜைக்காக இன்று (16.07.26) மாலை சபரிமலை நடை திறப்பு!
தமிழின் “ஆடி”, மலையாள “கருக்கிடகம்” மாதப் பிறப்புகளின் மாதாந்திர பூஜைக்காக இன்று (16.07.26) மாலை சபரிமலை நடை திறப்பு!
ஜுலை 21 வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி!!
“ஆன்-லைன் ” முன்பதிவு துவக்கம்!!!
* மலையாள “கருக்கிடகம்” மற்றும் தமிழின் “ஆடி” மாதப்பிறப்புகளை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜுலை 16ம் தேதி) மாலை 5 மணிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
* ஜூலை 21ம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகளில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய “வெர்ச்சுவல் க்யூ” மூலம் “ஆன்-லைன்” முன்பதிவு துவங்கியுள்ளது. இன்று (16.07.26 ) மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரி, நடைதிருந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி வழக்கமான பூஜைகளை துவக்குகிறார்.
தொடர்ந்து, மேல்சாந்தி கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் 18ம் படியேறி சாமி தரிசனம் செய்யத் துவங்குவர். ஜுலை 21-ம் தேதி வரை நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், நெய் அபிஷோம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

* தினமும் காலை 5 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10 மணிக்கு “ஹரிவராசனம்” பாடி நடை அடைக்கப்படும்.
* பக்தர்கள், தரிசனத்திற்காக sabarimalaonline.org. in மற்றும் தங்கும் விடுதிக்கு https://www.onlinetdb.com என்ற அதிகாரபூர்வ இணைய தளங்களில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


