காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை பகுதியில் திருவண்ணாமலை ஆதீனம் குரு மகா சன்னிதானம் உள்ளது. ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமி கல்வி உதவித்தொகை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


