in

பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்

 

மங்களூரில் துணை மின் நிலையத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் 30- மேற்பட்டோர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.

சம வேலை சம ஊதியம் ஒப்பந்த முறை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா.

கடலூர் மாவட்டம் மங்களூர் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யக்கோரி அலுவலகம் முன்பு ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர்.

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சம வேலை சம ஊதியம், ஒப்பந்த முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.

புயல் வெயில் மழையென பாராமல் பணி செய்து வரும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஒப்பந்த ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுபாக்கம் மங்களூர் தொழுதூர் திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

What do you think?

ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

ராமேஸ்வரம் கோவில் இடங்கள் மீட்பு; அகற்றும் பணிக்கு எதிர்ப்பு