பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருவுருவ மணல் சிற்பம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: அக்னி தீர்த்த கடற்கரையில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் காமராஜர் திருவுருவ மணல் சிற்பம்:
பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ மணல் சிற்பம் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும், ‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் பிறந்தார்.
ஏழை குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இவரது பிறந்தநாள், தமிழ்நாட்டில் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ மணல் சிற்பம் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் சிற்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்பதை மக்களுக்கு எடுத்துறைக்கும் விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் தங்களது கைகளை அச்சாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அக்னி தீர்த்த கடற்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காமராஜர் மணல் சிற்பம் மூன்று யூனிட் மணல்களை கொண்டு 10 மணி நேரத்தில் அமைக்கப்பட்டதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
மேலும் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் திருவுருவ மலர் சிற்பத்தை கடற்கரைக்பழகு வந்திருந்த வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருவதுடன், காமராஜர் மணல் சிற்பத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர்.


