அனல் மின் நிலைய செயல்பாடு குறித்து ஆய்வு
தூத்துக்குடி தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதான முதல் அலகில் பராமரிப்பு பணிக்கு பின்பு இன்று 210 மெகாவாட் 210 மெகாவாட் மின் உற்பத்தியை தமிழக மின்சார துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார். பின்னர் அனல் மின் நிலையத்தில் அனல் மின் நிலைய செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்அனல் மின் நிலையில் கடந்த 15 3 2024 ஆம் ஆண்டு அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதலாவது அலகு மற்றும் இரண்டாவது அலகு முற்றிலுமாக எரிந்து சேதமானது.
இதன் காரணமாக மின் உற்பத்தி முற்றிலுமாக இரண்டு அலகுகளிலும் சேர்த்து 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு அலகுகளையும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இதில் இரண்டாவது அலகு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மின் உற்பத்தியை துவங்கிய நிலையில் இன்று முதலாவது அழகில் 210 மெகாவாட் மின் உற்பத்தியை தமிழக மின்சார மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.
இதை அடுத்து அனல் மின் நிலைய செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அனல் மின் நிலையத்தின் பல்வேறு அலகுகள் மற்றும் மின் உற்பத்தி குறித்து ஆய்வு செய்தார். அப்போது மின்வாரிய தலைவர் ராஜேஷ் லகானி மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் ஸ்ரீதர் தமிழ்நாடு மின் உற்பத்தி இயக்குனர் ஜான் டால்டன் தூத்துக்குடி அனல் நிலைய முதன்மை பொறியாளர் பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


