in

வைகை ஆற்றை தூய்மை படுத்தும் தொடர் பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

வைகை ஆற்றை தூய்மை படுத்தும் தொடர் பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

 

மதுரையின் அடையாளம் வைகை ஆற்றை தூய்மை படுத்தும் தொடர் பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

சமீபத்தில் மதுரை வந்த மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள் கூறியது போல வைகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறங்கி விட்டோம் மதுரை வைகை ஆற்றை பார்த்ததற்கு பின்பு கவர்னர் பேசிய வைகையை மீட்டெடுப்போம் என்ற பேச்சு படி நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வைகையை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிவிட்டோம் கவர்னர் பேசியதை நாங்கள் செய்து வருகிறோம் எனவும் ஸ்டார் குரு பேட்டி.

ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஸ்டார் குரு என்ற குருசாமி தலைமையில் தொடர் தூய்மைப்பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வைகை ஆற்றின் யானைக்கல் கீழ் பாலம் பகுதியில் நடைபெற்றது

வைகையில் பொதுமக்களுக்கு சேதத்தை விளைவிக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி வழி ஆற்று படித்துறைகளை குப்பை கூடம் இன்றே நன்கு சுத்தப்படுத்துதல் கள்ளழகர் வைகை அற்றும் வைகை ஆற்றில் இறங்கும் காலங்களில் வகையாற்றை சுத்தப்படுத்தி வைகை ஆற்றில் மக்கள் நேரடிச் செல்ல வழிவகை செய்தல் போன்ற தூய்மை பணிகளுடன் வைகை ஆற்றில் இரு கரைகளிலும் தொடர் கண்காணிப்பிற்காக 350 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அமைத்து வைகை வைகை ஆற்றை கண்காணிப்பது போன்ற பணிகளின் மூன்றாம் ஆண்டு துவக்க நடைபெற்றது

தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் கல்லூரி மாணவிகள் வைகையாற்றை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

மதுரை காந்தி மியூசியத்தின் பிரதான வாயில் முன்பு உள்ள காந்தி சிலை முன்பாக வைகை ஆற்றினை சுத்தமாக வைத்துக் கொள்ள உறுதி ஏற்போம் எனவும் வைகை ஆற்றில் குப்பை கலப்பதை தடுத்து நிறுத்த பாடுபடுவோம் எனவும் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்களுடன் பொதுமக்களும் இந்த பணியில் தங்களை இணைத்துக் கொண்டு வைகை ஆற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் எடுத்து கொண்டார்கள்.

 

இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டார் குரு வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறோம் குறிப்பாக உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதையும் சுத்தப்படுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் வைகை ஆற்றில் நீராடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்போம்.

அதுபோக தொடர்ந்து மக்களை அச்சப்படுத்தும் ஆகாயத்தாமரைகளை வருடம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறோம் எனவும் இந்த பணியை நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்வோம் எனவும்.

சமீபத்தில் மதுரை வந்த மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள் கூறியது போல வைகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறங்கி விட்டோம் மதுரை வைகை ஆற்றை பார்த்ததற்கு பின்பு கவர்னர் பேசிய வைகையை மீட்டெடுப்போம் என்ற பேச்சு படி நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வைகையை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிவிட்டோம் கவர்னர் பேசியதை நாங்கள் செய்து வருகிறோம். எனவும் தெரிவித்தார்.

What do you think?

ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நிகும்பலாயாகம்

பாம்பன் ராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று மீன் விலை நிலவரம்