திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுன மகாராஜா திருக்கல்யாணம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழா எனும் தீமிதி திருவிழாவில் 12-ம் நாள் திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுன மகாராஜா திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் திரௌபதியம்மன் ஆலயம் அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில் முக்கிய திருவிழாவான அர்ஜுனன் மகாராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு மங்கல தாம்பூல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் மகாராஜா மணமகன் கோலத்தில் திரௌபதி அம்மன் மணமகள் கோலத்தில் காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து கலசை பூஜையும் காப்பு கட்டும் வைபவம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் மங்கள நான் அணிவிக்கும் வைபவம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மணங்கோலத்தில் காட்சியளித்த தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து இரவு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ அர்ஜுனா மகாராஜா மற்றும் ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு கிராம வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கான உபயதாரர் கணாச்சாரி வகையறா.
மேலும் இந்த அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் மற்றும் தீமிதி திருவிழா வருகின்ற 16-07-2026 அன்று நடைபெற இருக்கிறது.


