in

ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம்

ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம்

 

நாமக்கல் பாலப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண வைபவ நிகழ்வு

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பாலப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, பாலமுருகனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பாலப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

What do you think?

நாமக்கல் கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 7-ம் நாள் நிகழ்வு திருகல்யாண வைபவம்

சமூக நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார்