ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றம்
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி மாத பிரம்மோற்சவம் – 11 நாட்கள் நடைபெறும் விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் – கொடிமரத்த அருகே எழுந்தருளிய பெருமாளை மனம் உருக வணங்கிச் சென்ற பக்தர்கள்.
மதுரை முனிச்சாலை பகுதியில் இருக்கக்கூடிய மீனாட்சிபுரம் இரண்டாவது தெரு பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக வசந்த மண்டபத்தில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அங்கே வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் உள்பிரகாரம் வழியாக பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி கொடிமரத் அருகே வளம் வந்தபோது பக்தர்கள் கோவிந்தா என மனமுருகப் பெருமாளை வணங்கிய நிலையில் கருடர் உருவம் பொறிக்கப்பட்ட கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மகா தீபாராதனை தூபம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து குறித்த நேரத்தில் மந்திரங்கள் முழங்க மேலதாலங்கள் முழங்க ஆனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கொடியேற்றத்தின் போது கொடிமரத் அருகே சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்ற நிலையில் சுவாமி வையாளியாகி மீண்டும் வசந்த மண்டபத்திற்கு வருகை தந்தார்.
வசந்த மண்டபத்திற்கு வருகை தந்த பிறகு பக்தர்களுக்கு கோஷ்டியின் முடிவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பெருமாள் விசேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளார்.
இந்நிலையில் குறிப்பாக வரும் ஒன்பதாம் தேதி ஏழாம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.

