in

மாமுனிகளின் திருஅவதாரஉற்சவத் திருவிழா

மாமுனிகளின் திருஅவதாரஉற்சவத் திருவிழா

 

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின ஆச்சாாியரான ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருஅவதாரஉற்சவத் திருவிழா. வானமாமலை மதுரகவி வானமாமலை ஜீயா் சுவாமிகள் தலைமையில் ஏராளமான ஆஸ்திக அன்பா்கள் பங்கேற்று தாிசனம்.

வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீமனவாளமாமுனிகள் திருஅவதார உற்சவம் கடந்த 4ம் தேதி ஆரம்பித்து 10 தினங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அழகியமணவாள பெருமாள் நாயனார் எனும் இயற்பெயருடன் சுவாமி மணவாள மாமுனிகள் எம்பெருமானாரின் மறு அவதாரமாக ஐப்பசி மூலநக்ஷத்திரத்தில் அவதரித்தாா் .

வைணவத்தைப் பரப்பும் பொருட்டு வானமாமலை முதலாவது ஜீயரான பொன்னடிக்கால் ஜீயா் சுவாமிகள் உள்ளிட்ட ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் (எட்டுப்பேர் அடங்கிய குழு) உருவாக்கினார். மாமுனிகள் யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட பத்தொன்பது நூல்களை நமக்கு தந்தருளினாா்.

மாமுனிகள் திருநட்சத்திர தினமான ஐப்பசி மூலம் மான இன்று ஸ்வயம்வக்த ஷேத்திரங்களில் ஒன்றானதும் ஜீயா் பரம்பரையில் முதலாவதாக மாமுனிகளால் நியமிக்கப்பட்ட வானமாமலை திருக்கோவிலில் நாங்குனோி மதுரகவி வானமாமலை ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்காக காலை அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு நித்ய எண்ணெய்காப்பு காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மனவாளமாமுனிகள் சன்னதியில் சுவாமி ராமானுஜா் ஏழுந்தருளினாா். அதனை தொடா்ந்து இருவருக்கும் சோ்த்தி திருமஞ்சனம் நடைபெற்றது.

முதலில் நவகலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றதும் ஸ்ரீமனவாளமாமுனிகளுக்கு கட்டியம் கூறப்பட்டது. அதனை தொடா்ந்து மாமுனிகளுக்கும் சுவாமி ராமானுஜருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து இருவருக்கும் திருமண்காப்பு சாற்றி பவித்ரமாலை மலா்மாலைகளால் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

அத்யாபக கோஷ்டியினரால் திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றதும் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமாநுஜ ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் கட்டி மாலை அணிவித்து ஈரவாடை தீா்த்தம் வழங்கி சடாாி மாியாதை செய்யப்பட்டது. மாமுனிகளுக்கு சாற்றிய திருமண் ஸ்ரீசூா்ணம் மற்றும் ஈரவாடை தீா்த்தம் வழங்கப்பட்டது.

பின்னா் வெள்ளி தோளுக்கிணியானில் ஸ்ரீவரமங்காசமேத தெய்வநாயகப்பெருமாள் சன்னதிக்கு ஏழுந்தருளி மங்களாசாசனம் நடைபெற்றது. ஜீயா் சுவாமிகள், அத்யாபக கோஷ்டியினரால் ராமாநுஜ நூற்றந்தாதி பாடப்பட்டு திருக்கோவில் வலம் வந்தனா்.

மாலையில் ஜீயா் சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ ராமானுஜா் ஸ்ரீ மனவாளமாமுகள் ஒரே பல்லக்கில் ஏழுந்தருள் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது.

What do you think?

திருக்கார்த்திகை தீப திருவிழா துர்கையம்மன் உற்சவம்

திருக்கார்த்திகை தீப திருவிழா திருக்குடைகள் காணிக்கை