தண்டு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா – ஊஞ்சல் உற்சவம்
புதுச்சேரி ஸ்ரீ தண்டு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா – ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது….
புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு நவராத்திரி தினங்களில் பத்து நாட்களும் சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் தினமும் ஒரு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், கஞ்சி வார்த்தல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அம்மனின் வணங்கிச் சென்றனர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது…
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சரவண குருக்கள், அசோக் குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர்…


