in

மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்

மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்

 

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், உற்சவம் துவங்குவதை குறிக்கும் வகையில் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது.

கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது.

இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் அனைத்து சிவ ஆலயங்களில் இருந்தும் சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

ஐப்பசி 1ம்தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவாலயங்களில் உற்சவம் துவங்குவதை குறிக்கும் விநாயகர் கொடி ஏற்றம் மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஏழாம் தேதி பெரிய கொடியேற்றமும்,பத்துநாள் உற்சவத்தில், மயிலம்மன் பூஜைய, திருக்கல்யாணம் திருத்தேர், நடைபெற்று 16ம்தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், 17ம்தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.விநாயகர் கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

 தூய்மை பணியாளர்களை பாராட்டிய  பிரேமலதா விஜயகாந்த்

மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் முகாம்