in

வேளாங்கண்ணி புறவழி சாலை பணிக்கு எதிர்ப்பு: மாங்காய்களுடன் விவசாயிகள் மனு

வேளாங்கண்ணி புறவழி சாலை பணிக்கு எதிர்ப்பு: மாங்காய்களுடன் விவசாயிகள் மனு

 

வேளாங்கண்ணி புறவழி சாலை பணிக்காக விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாக கூறி மாங்காய்களுடன் மனு அளிக்கவந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்.

நாகப்பட்டிணம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் மா, தென்னை மற்றும் விவசாய நிலங்களை அழித்து அகல சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஈசிஆர் சாலையில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்கு சக்தி விநாயகர் கோயில் இணைப்பு சாலையாக இருந்து வரும் நிலையில், அதன் அருகிலேயே புதிய அகல சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து
நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாங்கொத்துகளை கையில் ஏந்திய படி மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால் பரபரப்பு.

சாலை அமைந்தால் தெற்குப்பொய்கை நல்லூர் உள்ளூர் கிராம மக்களுக்கு சொந்தமான 400 காய்ப்புள்ள மாமரங்கள், 80 தென்னை மரங்கள், 40 பனை மரங்கள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது.

விவசாய நிலங்களை அழித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் அகல சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை அமைக்கும் பணிக்கு அரசு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவலியுறுத்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

நாகையில் ‘We The Leaders’ அமைப்பின் தொடக்க விழா

சக்திவாய்ந்த நிலநடுக்கம் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை