in

🌧️ புதுச்சேரியில் விடிய விடிய கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை!

🌧️ புதுச்சேரியில் விடிய விடிய கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் இரவு முழுவதும் பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகள் கூடி மகிழ்ந்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதுவையில் கடந்த சில தினங்களாக வானிலை மாற்றம் ஏற்பட்டு தொடர் மழை பெய்து வருகிறது.
கடந்த 16ந் தேதி 2 மணி நேரத்தில் 10 செமீ மழை பதிவானது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வானில் மேகமூட்டம் காணப்பட்டது அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு 10 மணியளவில் லேசான தூறலாக தொடங்கிய மழை, பலத்த கனமழையாக மாறியது. நள்ளிரவில் மேலும் தீவிரமடைந்து இடைவிடாது கொட்டித் தீர்த்தது.

இன்று காலை முதல் வானம் இருண்டு காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை, குளிர்ந்த காற்று வீசுகிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முழுவதும் கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
இதனிடையே கடற்கரை சாலையில் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கடல் அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்றைவிட இன்று கடல் சீற்றம் குறைந்துள்ளதால் பலரும் அலைகளில் விளையாடி மகிழ்ந்தனர்

What do you think?

நாகூர் தர்காவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பை திருட்டு!

குறிஞ்சிப்பாடி அருகே சிவன் – பார்வதி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!