in

சிதம்பரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!

🚨 சிதம்பரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!

கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரி விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் பெரியார் சிலை அருகில் இருந்து அந்த அமைப்பினர் சேகர், கற்பனைச்செல்வம், கண்ணன் ஆகியோர்களது அவர்களுக்கு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் கஞ்சிதொட்டிமுனை பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.

What do you think?

திருவாடானையில் ரூ.3.95 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு!

நாகூர் தர்காவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பை திருட்டு!