in , ,

(05.03.2024) இன்றைய முக்கிய செய்திகள் – பிரிட்டன் தமிழ்


Watch – YouTube Click

(05.03.2024) இன்றைய முக்கிய செய்திகள் – பிரிட்டன் தமிழ்

 

பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து

இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான் முஸ்லீம் – நவாஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையைப் பெறவில்லை என்றாலும் அதிக இடங்களைப் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்த நிலையில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

 

ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க முடியாது

கர்நாடக மாநில கருவூலத்தில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழகத்திற்கு ஒப்படைக்க ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் நகைகளை திரும்ப அனுப்ப முடியாது என பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மாத சம்பளம் நன்கொடை அளிக்கும் மோடி

எனது மாத சம்பளத்தை முடிந்த வரையில் நன்கொடையாக மக்களுக்கு அளித்து வருகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் நிகழ்வில் பேசினார்.

 

தமிழக வானிலை நிலவரம்

டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

மோடிக்கு பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி

மோடி கா பரிவார் (நான் மோடியின் உறவினர்) என்ற முழக்கம் பாஜகவினர் மத்தியில் பிரபலமாகி வரும் வேளையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், மணிப்பூர் மக்கள், வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் எல்லாம் உங்கள் சொந்தம் தானா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதிமுக – புதிய தமிழகம் கூட்டணி

அதிமுக – புதிய தமிழகம் கட்சிகளிடையே மக்களவை தேர்தல் குறித்து கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறினர்.

 

வரலாற்றை திரித்து பேச வேண்டாம்

மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர் எனவும் வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றியதாக ஆளுநர் பேசியிருந்தார்.

 

முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்கு

இதுவரை ரூ. 1260 கோடி செலவு

ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின் கொண்டாட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதற்கு ரூ. 1260 கோடி செலவாகியுள்ளதாக தகவல். உணவுகளுக்கான கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டி

கடந்த 2019 தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நின்று வென்ற திமுக எம்பி கனிமொழி, இந்த முறையும் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனுவை திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

 

SBI செயல் கேவலமானது

பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட SBI வங்கி கால அவகாசம் கேட்டுள்ளது கேவலமானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

 

மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம்

மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் , வெகுநாட்கள் கிடப்பில் இருந்த மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எல்&டி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

ஸ்பெயின் பெண்ணுக்கு

ரூ.10 லட்சம் இழப்பீடு

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜார்கண்ட் துணை கமிஷனர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.

 

பிரதமர் எங்களுக்கு அண்ணன்

தெலுங்கானா முதல்வர் புகழாரம்

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அரசு விழாவில் பேசுகையில், பிரதமர் மோடி எங்களுக்கு மூத்த அண்ணன் போன்றவர். குஜராத் போல தெலுங்கானாவும் வளர்ச்சி பெற மத்திய அரசின் ஆதரவு தேவை. அதனால் மோதல் போக்கை நான் கடைபிடிக்க வேண்டியதில்லை. என பேசியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை வாய்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு

அரசு வழங்கிய மரக்கன்றுகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் காய்ந்து குப்பையாகி கிடைக்கிறது