in

விசாகப்பட்டினத்தில் கடற்படை கூட்டுப் பயிற்சி


Watch – YouTube Click

விசாகப்பட்டினத்தில் கடற்படை கூட்டுப் பயிற்சி

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் “மிலன்’ கடற்படை கூட்டுப் பயிற்சியை இந்தியா நடத்தவுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடல் பகுதியில் வரும் 19}ஆம் தேதி தொடங்கி 9 நாள்களுக்கு இக்கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்திய கடற்படையின் ஏற்பாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “மிலன்’ கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது. கடந்த 1995}ஆம் ஆண்டில் இருந்து இப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய பயிற்சி 2022}ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டு வரும் 19 முதல் 27}ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல்சார் அடிப்படையில் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. இம்முறை 50}க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்களால் கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாபெரும் கடற்படை கூட்டுப் பயிற்சியை இந்தியா நடத்தவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அசாமில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு இந்தியா கூட்டணியில் விரிசல்

பிப்ரவரி 17 இல் விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட்