in

தஞ்சை பெரிய கோவிலுக்கு விரைவில் யானை வரும் – ஆதீனம் நம்பிக்கை!

🐘🙏 தஞ்சை பெரிய கோவிலுக்கு விரைவில் யானை வரும் – ஆதீனம் நம்பிக்கை!

தஞ்சை பெரிய கோவிலுக்கு அடுத்த விழாவிற்குள் யானை வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய ஆட்சி நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும் ஆதீனம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு சதய விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து பின்னர் பேட்டி அளித்த திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அளித்த பேட்டியில் தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் மாமன்னனுடைய சதயப் பெருவிழா மிகச் சீரோடும் சிறப்போடும் நேற்றைய நாள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

x

இன்றைய நாள் பெருவுடையாருக்கு அபிஷேகமும், வீதி உலாவும், கலை நிகழ்ச்சிகளும் இவை எல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனுடைய பரம்பரை அறங்காவலர், அரசு அலுவலர்கள் அரசு நல்ல முறையில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறார்கள். ஆகையால் இந்த எல்லோரும் இதிலே கலந்து கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் ராஜராஜ சோழன் தன்னுடைய வாழ்நாளைப் பொதுமக்களுக்காகவும், சமயத்திற்காகவும் அர்ப்பணித்தவன். திருமுறைகளைக் கண்டெடுத்துக் கொடுத்ததினால் அவனுக்குத் திருமுறை விழா கொண்டாட வேண்டும் என்கின்ற நிலையிலே, எங்களுடைய ஆதீனத்திலே பாடசாலையில் பயிலுகின்ற 45 பிடார்களை வைத்து ஓதுவார்கள் — பிடார் என்றால் ஓதுவார்கள் — அவர்களை வைத்துத் திருமுறை விண்ணப்பம் செய்ததாக நமக்குக் கல்வெட்டு காட்டுகிறது.

அந்த வகையிலே இங்கே நாங்கள் 45 ஓதுவா மூர்த்திகளோடு இன்றைக்குப் பேரபிஷேகமும் இங்கே நடைபெறுகிறது.

இந்த விழா ஏற்பாட்டினை மிகச் சீரிய முறையில் செய்திருக்கின்ற அரசுக்கும், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விழாத் தலைவர்கள், அரங்கத் தலைவர்கள் அனைவருக்கும் நமது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தஞ்சை பெரிய கோவிலுக்கு யானை பெறுவது குறித்து கேட்டதற்கு எங்களுடைய வைத்தியஸ்வரன் கோவிலுக்கு இப்பதான் யானை வந்திருக்கு. இன்னும் மூன்று யானைகளுக்கு நாங்க விண்ணப்பம் செய்திருக்கிறோம்.

அந்த குஜராத் அரசாங்கத்திலிருந்து, அசாம்ல இருந்து எங்களுக்கு சான்ஷன் ஆயிட்டது. இப்ப இன்னும் இதுல வந்துட்டு இருக்குன்னா, அதேபோன்று இங்கேயும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மிக விரைவில் அடுத்த விழாக்குள் யானை வந்தாலும் வந்துவிடும்.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி நல்ல வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

What do you think?

பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 இளைஞர்கள் கைது!